தமிழகம் முழுவதும் மாட்டுச்சந்தை வர்த்தகத்தையே முடக்கியது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எனப் பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை மணப்பாறை தொகுதியில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற மணப்பாறை முறுக்குக்கு இந்த வருடம் மார்ச் மாதம் நமது மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது.
மணப்பாறையில், 1928 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாட்டுச்சந்தை, தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்கள் அளவிலும் புகழ் பெற்றது. 100 ஆண்டுகளுக்கு முன்பு மணப்பாறையை சுற்றியுள்ள கிராமங்களில் ஆங்காங்கே சிறிய அளவில் நடைபெற்று வந்த மாட்டுச் சந்தை, தற்போது 12 ஏக்கர் அளவில் மாபெரும் சந்தையாக மாறியுள்ளது.
ஆனால் திமுக, மணப்பாறை மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான, மாயனூர் தடுப்பணையிலிருந்து பொன்னனியாறு அணை மற்றும் கண்ணூத்து அணைக்கு நீர் வரத்து, மணப்பாறை சட்டமன்றத்தில் அதிகளவு காய்கறி விளைவதால் ஒட்டன்சத்திரம் போல மிகப் பெரிய காய்கறி சந்தை, விவசாயிகளின் விலை பொருட்களுக்கு நல்ல விலை, பால்… pic.twitter.com/TDxtE6tLlF
— K.Annamalai (@annamalai_k) November 5, 2023
வாராவாரம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை மதியம் வரை நடைபெறும் மணப்பாறை மாட்டுச் சந்தையில், ஒரு நாள் மட்டுமே மூன்று கோடி முதல் ஐந்து கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இங்கு, ஜல்லிக்கட்டு மாடுகள் கூட விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டை தடை செய்து, தமிழகம் முழுவதும் மாட்டுச்சந்தை வர்த்தகத்தையே முடக்கியது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி.
திருச்சி மாவட்டத்திற்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, திருச்சி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 4,591 கோடி ரூபாய், திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு 951 கோடி ரூபாய், பிரதமரின் வீடு திட்டம் மூலமாக 45,376 பேருக்கு வீடு, 3,94,338 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,02,252 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,35,861 பேருக்கு, ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 97,097 பேருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,47,248 விவசாயிகளுக்கு, வருடம் 6000 ரூபாய், 8,018 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ளது.
ஆனால் திமுக, மணப்பாறை மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான, மாயனூர் தடுப்பணையிலிருந்து பொன்னனியாறு அணை மற்றும் கண்ணூத்து அணைக்கு நீர் வரத்து, மணப்பாறை சட்டமன்றத்தில் அதிகளவு காய்கறி விளைவதால் ஒட்டன்சத்திரம் போல மிகப் பெரிய காய்கறி சந்தை, விவசாயிகளின் விலை பொருட்களுக்கு நல்ல விலை, பால் சார்ந்த தொழிற் பண்ணைகள், காவேரி குடிநீர் சரிவர கிடைக்க ஏற்பாடு என ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர். திமுக சின்னத்தில் போட்டியிட்ட இந்த கட்சிக்கு தமிழகத்தில் இருக்கும் ஒரே வேலை, பல உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த 1998 கோவை குண்டுவெடிப்புத் தீவிரவாதிகளை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவது தான். மனிதநேயமற்ற மக்கள் கட்சி என்றுதான் அழைக்க வேண்டும்.
மணப்பாறையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. ஆனால், திமுக மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், கல்லூரி கட்டுமான பணியின் போது கிடக்கும் சரளை மண்ணுக்காக, கலனிவாசல்பட்டிக்கு அரசு கல்லூரியை மாற்றிவிட்டார்.
இன்றுவரை இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டி முடிக்கப்படவில்லை. தற்போது இந்த கல்லூரி சொந்தக் கட்டிடம் இல்லாமல், மணப்பாறை அரசுப் பள்ளியில் இயங்கி வருகிறது. எய்ம்ஸ் பற்றிப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?
புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு குடிப்பழக்கம் கேடு விளைவிக்கும் என்று, டாஸ்மாக்கில் மது விற்பனை செய்பவர், அறிவுரை கூறுவார் என்கிறார் அமைச்சர் முத்துசாமி. மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்.
சென்ற ஆண்டு டாஸ்மாக்கில் சராசரியாக மதுகுடிப்போர் எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தது, தற்போது 90 லட்சமாக உயர்ந்துள்ளது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. இதுதான் திமுகவின் ஒப்பற்ற சாதனை.
தமிழ்நாட்டை முழுவதுமாக குடிநாடக மாற்றும் வரை அமைச்சர் முத்துசாமி ஓயமாட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில், இத்தகைய மக்கள் விரோத திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத் திட்டங்களை வழங்கியுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.