ராணுவத்தில் உள்ள பெண் வீரர்கள், மாலுமிகள் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு மகப்பேறு, குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தை தத்தெடுப்பு விடுப்புக்கான விதிகளை அதிகாரிகளுக்கு இணையாக நீட்டிப்பதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
தற்போது முப்படைகளில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு மட்டும், ,குழந்தை பேறுகால விடுமுறை, 180 நாட்கள் முழு சம்பளத்துடன் வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகள் வரை இந்த சலுகையைப் பெறலாம். மேலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் பெண் அதிகாரிகளுக்கு, 180 நாட்கள் தத்தெடுப்பு விடுமுறை சலுகை வழங்கப்படுகிறது.
அதிகாரிகள் அளவில் உள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த சலுகைகளை, முப்படைகளிலும் பணியாற்றும் அனைத்து நிலை பெண்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நடவடிக்கை இராணுவத்தில் பெண்களின் பணி நிலைமைகளை மேம்படுத்தும் என்றும், தொழில்முறை மற்றும் குடும்ப வாழ்க்கையின் கோளங்களை சிறந்த முறையில் சமநிலைப்படுத்த உதவும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.