ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றையப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இலங்கை அணியின் வீரர்கள் :
பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், துஷ்மந்த சமீரா, மகேஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, தில்ஷன் மதுஷங்கா, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா.
வங்கதேச அணியின் வீர்ரகள் :
தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் சாண்டோ, முஷ்பிக்கூர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா ரியாத், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), தாஹித் ஹிரிடோய், மெஹதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.