நேபாளத்தில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநிடுக்கம் ஏற்பட்ட நிலையில், டெல்லி மற்றும் வட இந்தியா முழுவதும் அதன் தாக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
நேபாளத்தில் இன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வடக்கே 233 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 157 பேர் கொல்லப்பட்டனர் .160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.காத்மாண்டுவில் இருந்து, 500 கி.மீ., தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.