ஜெர்மனியில் நடைபெறும் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்ற இந்திய வீரர்.
ஜெர்மனி நாட்டில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய டென்னிஸ் வீரர் ஸ்ரீ ராம் பாலாஜி பங்குபெற்றார்.
இவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆன்ட்ரூயுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தார்.
இருவரும் இஸ்மெய்னிங்கில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்று சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் நேற்று இஸ்மெய்னிங்கில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய வீரர் ஸ்ரீ ராம் பாலாஜி மற்றும் ஜெர்மனி வீரர் ஆன்ட்ரூ ஆகியோர் இணை ஜெர்மெனியின் பிரான்ட்ஜென் மற்றும் ஜெபன்ஸ் ஆகியோரை எதிர்கொண்டது.
ஒரு மணி நேரம் 28 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் பாலாஜி மற்றும் ஆன்ட்ரூ இணை 7-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ட்ஜென் மற்றும் ஜெபன்ஸ் ஆகியோரை வீழ்த்தியது.
இதன்மூலம் இருவரும் சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.