சத்தீஸ்கர், மிசோராமில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாஜக, ஆளும் தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் முன்னணி, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.57 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
மாநிலம் முழுவதும் 1,274 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இதேபோல், சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 90 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 40.78 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.
5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.