உலகக்கோப்பை கிரிக்கெட் : வங்கதேசம் வெற்றி !
May 20, 2025, 07:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : வங்கதேசம் வெற்றி !

Web Desk by Web Desk
Nov 7, 2023, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

41 வது ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்களை எடுத்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றையப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஷங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இதில் முதல் ஓவரின் முடிவிலேயே குசல் பெரேரா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் 12 வது ஓவரில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா களமிறங்கினார். சமரவிக்ரமா மற்றும் பதும் நிஷங்கா இருவரும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தி வந்தனர்.

அப்போது 13 வது ஓவரில் பதும் நிஷங்கா 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 36 பந்துகளில் 41 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சரித் அசலங்கா வங்கதேசத்தின் பந்தை அடித்து நொறுங்கினார்.

இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்த சமரவிக்ரமா 24 வது ஓவரில் 4 பௌண்டரீஸ் என மொத்தமாக 42 பந்துகளில் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் மைதானத்திற்கு தவறான ஹெல்மேட் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். சரியான ஹெல்மெட் வரும் வரை ஏஞ்சலோ மேத்யூஸ் காத்துக்கொண்டிருக்க வங்கதேச வீரர்கள் விக்கெட்டிற்கு அப்பீல் செய்தனர். அதனால் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்துப் போனார்.

பின்னர் சரித் அசலங்கா 48 வது ஓவரில் 6 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 105 பந்துகளில் 108 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் தனஞ்சய டி சில்வா 34 ரன்களிலும், மகேஷ் தீக்ஷனா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் அடுத்து களமிறங்கிய வீரர்கள் டக் அவுட் ஆகி சென்றனர்.

இதனால் இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ரன்களை எடுத்துள்ளது.

வங்கதேச அணியின் அதிகபட்சமாக தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்களும், ஷகிப் அல் ஹசன், ஷோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்களும், மெஹதி ஹசன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர்.

இதில் தன்சித் ஹசன் 2 வது ஓவர் முடிவில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து லிட்டன் தாஸ் 6 வது ஓவர் முடிவில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் களமிறங்கினர். இவர்கள் இருவரின் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தது.

இதில் 31 வது ஓவர் முடிய ஷகிப் அல் ஹசன் 12 பௌண்டரீஸ் என மொத்தமாக 65 பந்துகளில் 82 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் 12 பௌண்டரீஸ் என மொத்தமாக 101 பந்துகளில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 41 வது ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்களை எடுத்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணியின் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்களும், மகேஷ் தீக்ஷனா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 82 ரன்களை அடித்த ஷகிப் அல் ஹசன்னுக்கு வழங்கப்பட்டது.

Tags: ICC World CupSrilanka VS Bangladesh
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Post

ஒவ்வொரு வாக்கும் வளமான மிசோராம் அமைய அடித்தளம் அமைக்கும்: அமித் ஷா!

Related News

முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? – கொந்தளித்த பொதுமக்கள்!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் : திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி வேதனை!

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

Load More

அண்மைச் செய்திகள்

வியக்க வைத்த பாரா செய்லிங் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த வான் சாகசம்!

உத்தரப்பிரதேசம் : எச்சில் துப்பி மசாஜ் செய்த சலூன் கடை ஊழியர் கைது!

எம்பிக்கள் குழுவில் யூசுப் பதானுக்கு பதில் அபிஷேக் பானர்ஜி!

சிவகங்கை : கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலி!

பிரதமர் தலைமையில் சுற்றுலாத்துறை முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டம்!

உப்பளங்களில் நீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்பு!

அவெனிஸ் ஸ்டாண்டர்டு எடிஷனை அப்டேட் செய்த சுஸூகி!

இங்கிலாந்து : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

பஞ்சாப் : பொற்கோயிலில் வான் பாதுகாப்பு அமைப்பு அமைக்க அனுமதி!

இந்தோனேசியா : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies