காஞ்சியில் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பிலும், மாவட்ட ஆட்சியர் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஞ்சியில் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விழா செயல்பட்டு வருகிறது. இதன் 29-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.
இதனையொட்டி, காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, ஸ்ரீகாஞ்சி மடம் சார்பிலும், ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் சார்பிலும், மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பிலும் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.