ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இதில் ஆஸ்திரேலியா 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று 2 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி விளையாடியா 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு பாதி கடலை தாண்டிவிட்டது என்றே சொல்லலாம், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றே ஆகா வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியே வெற்றிப் பெற்றுள்ளது.
மேலும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 84% வெற்றி பெரும் என்றும், ஆப்கானிஸ்தான் அணி 16% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.