மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் கட்ட வாக்குப்பதிவும், 2ம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ம் தேதியும் நடைபெறுகிறது. மிசோராம் மாநிலத்திலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மறுபுறம் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா ஒரு கட்டமாக நவம்பர் மாதம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் உள்ள திமானி சட்டமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் தோமர், போட்டியிடுகிறார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த முறை பாஜகவுக்கு சாதகமாக சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.
எனவே. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மற்றும் குணா மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி வருகை தருவது தொழிலாளர்களிடையே புதிய ஆற்றலைத் தூண்டும் என்றும் அமைச்சர் தோமர் கூறினார்.