திமுகவின் ராகு கால அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 3-ம் தேதி அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது. திருவண்ணாமலை, சென்னை, அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகள் உள்ள விழுப்புரம், கரூர், கோவை ஆகிய இடங்களில் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத்துறையிலிருந்து ஒப்பந்தம் என்ற பெயரில், சுமார் 2,000 கோடி ரூபாய் மடைமாற்றப்பட்டதின் பின்னணியில்தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாக ஒரு தகவல் உலா வருகிறது.
ஏற்கனவே, திமுக அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கடந்த மாதம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. தற்போது இந்த பட்டியலில் ராகு கால அமைச்சர் வேலுவும் சேர்ந்துள்ளார்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு சில தினங்கள் உள்ள நிலையில், தீபாவளி வரை இந்த சோதனை நடைபெறும் என்றும், பினாமிகளை மட்டும் ஐ.டி அலுவலகத்திற்கு வரவழைத்து விடிய விடிய விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வேலுவின் பினாமிகள் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.