தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்துகள் குறித்த விவரத்தைப் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நவம்பர் 9, 10, 11ஆம் தேதிகளில் 10,975 பேருந்துகள் இயக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்துவதற்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு பேருந்து நிலையம்
சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம் போல் இயக்கப்படும்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம்
செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகளும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும்.
தாம்பரம் சானடோரியம்
திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அரசு விரைவுப் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
பூவிருந்தவல்லி பணிமனை
பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஒசூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி மாநகரப் பேருந்து பணிமனை அருகிலிருந்து புறப்படும்.
கலைஞர் நகர் பேருந்து நிலையம்
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கலைஞர் நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
தாம்பரம் பேருந்து நிறுத்தம்
திண்டிவனம், செஞ்சி, வந்தவாசி வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.