அம்மு அம்மு சொல்லையில பொண்டாட்டியா பூரிக்கிறேன் சாமி… என்ற பாடல் வரிகள் மூலம், தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது, இவர், புஷ்பா -2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில், ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து மார்பிங் செய்த, வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அதில், ராஷ்மிகா மந்தனா கருப்பு நிற டிரஸில் லிப்டில் உள்ளே வருவது போல இருந்த அந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது. ஆனால், அந்த வீடியோ உண்மையில்லை என்றும், யாரோ மார்பிங் செய்து உருவாக்கியதும் பின்னர் தெரிய வந்தது.
டீப் ஃபேக் முறையில் முன்பு பல்வேறு பிரபலங்கள் குறித்து போலி வீடியோ பரவியது. தர்போது, இதற்கு ராஷ்மிகா மந்தனா பலியாக்கப்பட்டுள்ளார். இதற்குத் திரையுல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது பயத்தைத் தருகிறது. நான், பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போது இப்படி நடந்திருந்தால் என்னால் எப்படிச் சமாளிக்க முடியும் எனத் தெரியவில்லை எனக் கண்ணீரோடு வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
இந் நிலையில், ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட நபர்கள் குறித்து மத்திய அரசு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. பெண்களை ஆபாசமாகச் சித்தரித்து DEEP FAKE வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் பெண்கள் எந்த இடத்தில் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஆதரவாக மத்தியில் உள்ள பாஜக அரசு விரைவான நடவடிக்கை எடுத்து வருவதையே இது காட்டுகிறது எனத் திரையுலகில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.