சென்னைவாசிகளுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் காசா கிராண்ட். காரணம், மாநகரின் முக்கிய பகுதிகளில் எல்லாம் அப்பார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்து வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில், கடந்த 3 -ம் தேதி முதல் 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் துருவித் துருவி சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், உரிமையாளர், மேலாளர் வீடு என பல்வேறு இடங்களில் ரெய்டு மேளா அமோகமாக நடைபெறுகிறது. காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தில் மட்டும் 10 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புகுந்து அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
கோவையில் காசா கிராண்ட் இயக்குநர் செந்தில் குமார் வீட்டிலும், காசா கிராண்ட் நிறுவனத்திலும் நடத்திய சோதனையில் ரூ.600 கோடிக் கணக்கில் வராதது தெரிய வந்துள்ளது. சோதனையில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், காசா கிராண்ட் நிறுவனத்திற்கு சிக்கல் எழுந்தள்ளது.