வாரணாசிக்குக் காசி என்றும் பெனாரஸ் என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு. இந்த நகரம் இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராக விளங்கி வருகிறது. இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.
இங்குள்ள காசி விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
இப்படி பெருமையும், புகழும் வாய்ந்த வாரணாசியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.
வரலாற்று ஆய்வுகளின்படி, 17-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில், காசி விஸ்வநாதர் கோவிலை அழித்துக் கட்டப்பட்டது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராணி அஹில்யா பாய் ஹோல்கரின் உத்தரவின் பேரில் தற்போதைய கோவில் மசூதிக்கு அடுத்ததாகக் கட்டப்பட்டது.
மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் மா ஸ்ரீநகர் கௌரியை வழிபடுவதற்கான உரிமையை 5 இந்துப் பெண்கள் உரிமை கோரியதன் பேரில் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்துக்களின் பொக்கிஷமான ஞானவாபி மசூதியை போற்றி பாதுகாத்து வருகின்றனர்.