ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் இப்ராகிம் சத்ரான் சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றுக்கு வருகிறது. உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்குள் நுழையப்போகும் அணிகள் யார் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் இன்றையப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர்.
இந்தப் இப்ராகிம் சத்ரான் சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். இப்ராகிம் சத்ரான் கடைசி வரை களத்தில் நின்று நிதானமாக விளையாடி வந்தார்.
இவர் 143 பந்துகளில் 129 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் உலகக்கோப்பை தொடரில் சதம் அடிப்பது இதுவே முதல் முறை.
ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் உலகக்கோப்பை சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்து இருக்கிறார் இப்ராகிம் சத்ரான்.
இந்தப் போட்டியில் 291 ரன்கள் எடுத்ததன் மூலம் உலகக்கோப்பையில் தன் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 96 ரன்கள் சேர்த்த ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையில் கடைசி 10 ஓவர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்ற சாதனையையும் பதிவு செய்தது.