சீன சென்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சீனா சென்றுள்ளார். 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெய்ஜிங்கிற்குச் செல்லும் முதல் ஆஸ்திரேலியத் தலைவர் அல்பானீஸ் ஆவார்.
தலைநகர் பெய்ஜிங்கில் சீன பிரதமரை ஷி ஜின்பிங்கை அவர் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள், உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் காஷா மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
உளவு பார்த்த குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகளாக பெய்ஜிங் சிறையில் வாடும் ஆஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜுனின் வழக்கையும் அல்பானிஸ் எழுப்பினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள சமீபகால விரிசலில் இருந்து முன்னேறத் தயாராக இருப்பதாக சீனத் தரப்பில் இருந்து இது ஒரு தெளிவான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
சீனா ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. இரு நாடுகளும் பல தசாப்தங்களாக வர்த்தக உறவை உருவாக்கியுள்ளன. ஆஸ்திரேலியாவின் உணவு மற்றும் இயற்கை வளங்களை சீனா வாங்குகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் செல்வாக்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக பாரம்பரியமாக கருதப்படும் பசிபிக் தீவு நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதில் சீனா முனைப்புடன் உள்ளது.
சீனாவின் நகர்வுகள் மேற்கு நாடுகளிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளன, பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்கா நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.