சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குக் கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி விடுமுறைக்காக மக்கள் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குக் கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 9 -ம் தேதி காலை 6 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்படும், வந்தே பாரத் ரயில் பிற்பகல் 2 மணிக்குத் திருநெல்வேலி அடையும்.
அதேபோல, மறுமார்க்கத்தில் பிற்பகல் 3 மணிக்குத் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த ரயில் இரவு 11 மணிக்குச் சென்னை சென்றடையும். அன்றைய தினம் பிற்பகல் 2:50 மணிக்கு வழக்கமாக இயங்கும் வந்தே பாரத் ரயில் சேவை தொடர்ந்து இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.