உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், தனி ஒரு ஆளாக போராடி இரட்டை சதம் விளாசிய மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியையும் பெற்று தந்தார்.
ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் குவித்தது.
292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19 வது ஓவரில் 91 ரன்களில் 7 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது.
இதனால், ஆப்கானிஸ்தானின் வெற்றி உறுதி எனவே பெரும்பாலானோர் நினைத்தனர். ஆனால், மேக்ஸ்வெல் தனி ஆளாக நின்று போட்டியின் போக்கையே மாற்றினார்.
மேக்ஸ்வெல் 20 ரன்களில் எடுத்திருந்த போது அவர் அடித்த பந்து ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் கைக்கு கேட்ச் ஆகா சென்றது ஆனால் அந்த கேட்சை தவறவிட்டார் முஜீப். அதுவே ஆப்கானிஸ்தான் அணியின் தொலைவு முக்கிய காரணமாக அமைந்தது.
வீரம் படத்தில் அஜித் பேசிய, “என்ன தாண்டி தொட்ற” என்ற வசனம் போல, ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு மேக்ஸ்வெல் தனி நபராக போராடி வந்தார். காயத்தையும் பொருட்படுத்தாமல் இறுதிவரை மைதானத்தில் நின்று 201 ரன்களை குவித்து, ஆஸ்திரேலிய அணிக்கு 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தேடிதந்தார் மேக்ஸ்வெல்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியும் தனிப்பட்ட முறையில் மேக்ஸ்வெல்லும் பல சாதனைகளை புரிந்துள்ளார் . அதனை பின்வருமாறு பார்ப்போம் :
1. ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக, 287 ரன்களை சேஸ் செய்தது தான் அந்த அணியின் சிறப்பான செயல்பாடாகும்.
2. உலகக் கோப்பை போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் மேக்ஸ்வெல்.
3. பாட் கம்மின்ஸ் உடன் சேர்ந்து 8வது விக்கெட்டிற்கு மேக்ஸ்வெல் 202 ரன்களை சேர்த்தார். இது ஒருநாள் போட்டிகளில் 8வது விக்கெட்டிற்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
4. இரட்டை சதம விளாசிய முதல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஆவார். முன்னதாக ஷேன் வாட்சன் 185 ரன்கள் எடுத்தது தான் ஆஸ்திரேலிய வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
5. ஒருநாள் போட்டிகளில் இலக்கை துரத்தும்போது இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் மேக்ஸ்வெல். முன்னதாக, பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் அடித்த 193 ரன்கள் தான் இரண்டாவது இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்தது.
6. 6 வது விக்கெட்டிற்கு களமிறங்கிய வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகாவும் மேக்ஸ்வெல்லின் இரட்டை சதம் மாறியுயுள்ளது. இதன் மூலம் கபில் தேவ் எடுத்த 175 ரன்கள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
7. ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் மேக்ஸ்வெல் (128) பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இஷான் கிஷன் (126) முதலிடத்தில் உள்ளார்.
8. ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இல்லாமல் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர், என்ற சாதனையையும் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
9. ஒருநாள் போட்டிகளில் மேக்ஸ்வெல் 100 பந்துகளை எதிர்கொண்டது நேற்று தான் முதல் முறை ஆகும்.