ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் லால் சிங்கை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் லால் சிங் மனைவியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காந்தா ஆண்டோத்ராவால் நிர்வகிக்கப்படும் கல்வி அறக்கட்டளையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் லால் சிங் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து லால் சிங்கை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.