பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பீகார் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதாம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பங்கேற்று பேசினார். அப்போது, படித்த பெண்கள் திருமணம் செய்து கொண்டால் கணவருடன் இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் என்றும், பெண்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
பீகாரில் பெண்களின் கல்வியறிவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 2.9 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.