புகழ் பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி திருக்கோவிலில், தீபாவளி பண்டிகையையொட்டி கேதார கௌரி விரதப் பூஜை நடைபெற உள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் ஸ்ரீ காளஹஸ்தி திருக்கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களின் வாழ்விற்காக இந்த திருத்தலம் கடந்த 500 வருடங்களுக்கும் மேல் கட்டப்பட்ட பழமையான திருக்கோவில் ஆகும்.
ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் திருமணம் நீண்ட காலமாக ஆகாதவர்கள், பல பிரச்சனைகளில் சிக்கி அவதிப்படுபவர்கள், இந்த திருக்கோவிலுக்கு வந்து ராகு – கேது தோஷம் நீங்கவும், சர்பதோசம் நீங்கவும் பிரார்த்தனையும், பரிகாரமும் செய்து கொள்கின்றனர்.
இந்த கோவிலில், உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி, அந்த நீரை அருந்தினால் சரியாகப் பேச முடியாத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று ஐதீகம்
இப்படி பழமையும், பெருமையும் வாய்ந்த ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில்
தீபாவளியை முன்னிட்டு தேவஸ்தானம் சார்பில் கேதார கௌரி விரதம் நடைபெற உள்ளது. இந்த விரதம் 13 -ம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
அமாவாசை திங்கள்கிழமை வருவதால் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் கேதார கௌரி விரதப் பூஜை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
உற்சவ மூர்த்தியான கௌரி அம்மன் காலை 7 மணிக்கு மண்டபத்தில் எழுந்தருளி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பூஜை நடைபெறும்.
இந்த ஆண்டு தீபாவளி அன்று அமாவாசை ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் திங்கள்கிழமை மதியம் வரை அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை காலை கௌரி அம்மனுக்குப் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தலாம் எனத் திருக்கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.