உத்திர பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
அந்த மாநிலத்தில் புகழ்பெற்ற அலகாபாத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையில் நடப்பு ஆண்டில் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறிய மேலாண்மை தொடர்பான போதனைகளை உள்ளடக்கி ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பிபிஏ மற்றும் எம்பிஏ பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த படிப்பில் பகவான் கிருஷ்ணரின் பகவத் கீதை, ராமாயணம், வேத உபன்யாசம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள மேலாண்மை தொடர்பான கருத்துகளும் சேர்க்கப்பட்டு பாரம்பரிய முறையில் புதிய மேலாண்மை படிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மனிதர்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க உதவும் அஷ்டாங்க யோகாவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
தற்போது இந்த படிப்பில் 26 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், பல மாணவர்கள் இந்த படிப்பில் ஆர்வத்துடன் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உ.பி. அரசின் இந்த முயற்சிக்குக் கல்வியாளர்கள் பெரும் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.