நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து, 5 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இந்தக் கோழிப் பண்ணைகளில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த நவம்பர் 5-ஆம் தேதி ஒரு முட்டை விலை ரூபாய் 5.25-ல் இருந்து 5 காசுகள் அதிகரித்து, ரூபாய் 5.30 ஆனது. 6-ஆம் தேதி மீண்டும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூபாய் 5.35 ஆனது.
நேற்று மாலை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூபாய் 5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூபாய் 89 ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூபாய் 98 ஆக தென்னிந்தியக் கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.