நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 3-ம் தேதி ஐந்து மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமர்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IPC, CrPC மற்றும் எவிடன்ஸ் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக மூன்று முக்கிய மசோதாக்கள் அமர்வின் போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும், ஏனெனில் உள்துறைக்கான நிலைக்குழு ஏற்கனவே மூன்று அறிக்கைகளை ஏற்றுக்கொண்டது.
குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கி டிசம்பர் 25-ம் தேதிக்கு முன்னதாக முடிவடையும். நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றொரு முக்கிய மசோதா, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பானது. இதுவும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.