ஜம்மு-காஷ்மீர் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் கேடர் (தற்போது AGMUT) ஐபிஎஸ் அதிகாரியான குமார் 2019 டிசம்பரில் காஷ்மீர் ஐஜிபியாக நியமிக்கப்பட்டார்,
ஏடிஜிபி விஜயகுமார் காஷ்மீரில் அதிக காலம் பணியாற்றிய காவல்துறைத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சுமார் நான்கு ஆண்டுகளாக அவர் அங்கு பணியாற்றியுள்ளார்.
370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அவர் மத்திய பணியில் இருற்நத மே 2019 இல் முன்கூட்டியே திருப்பி அனுப்பப்பட்டார்.
அவர் முதலில் ஐஜி (ஆயுதப்படை) பின்னர் காஷ்மீர் ஐஜியாகவும், பின்னர் காஷ்மீர் மண்டல ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டார். காஷ்மீர் ஐ.ஜி., ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த காலத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முக்கிய கவனம் செலுத்தினார்.
பீகாரின் சஹர்சா மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், டெல்லியில் உள்ள ஜேஎன்யூவில் எம்ஏ முடித்துள்ளார். அவர் பெரும்பாலும் புல்வாமா, அவந்திபோரா, குல்காம் மற்றும் அனந்த்நாக் உள்ளிட்ட காஷ்மீர் பிராந்தியத்தின் மிகவும் சிக்கலான பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையாள்வதில் விஜயகுமார் நன்கு அனுபவம் பெற்றவர்.