டெல்லியில் காற்று மாசு தீவிரம் அடைந்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு நவம்பர் 9 முதல் 18 வரை குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளது.
மாசுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய அறிவுரைகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தலைமையில் அனைத்து துறைகளின் கூட்டம் நடைபெற்றது.
அப்போது DPCC தலைவரால் மூடப்பட்ட புகைக் கோபுரத்தை மீண்டும் தொடங்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கியதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும், நிகழ்நேர ஆய்வுத் தரவுகளை வெளியிடுவதற்கான வழிமுறைகளை வழங்கியதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கோபால் ராய் தெரிவித்தார்.
இரட்டைப்படை வாகனத் திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை டெல்லி அரசு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அளிக்கும் என்றும், அதன்பிறகு நவம்பர் 13 முதல் ஒற்றைப்படை எண் அமல்படுத்தப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கோபால் ராய் மேலும் தெரிவித்தார்.
மேலும் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டிலிருந்து விடுபட செயற்கை மழையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான முன்மொழிவு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் அனைத்து பள்ளிகளும் நவம்பர் 9 முதல் நவம்பர் 18, 2023 வரை குளிர்கால விடுமுறையைக் விட வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.