கட்டுமான பணிகளில் சுமார் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு வேலை வழங்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து காசா மீது தரை வழித்தாக்குதலில் அந்நாடு ஈடுபட்டுள்ளது. இந்த சண்டையில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன அல்லது கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
இதனையடுத்து இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன தொழிலாளர்கள் 90 ஆயிரம் பேரை உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கட்டுமான தொழிலாளர்களுக்கு அங்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவை சேர்ந்தஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க இஸ்ரேல் கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
ஐ.நா.சபையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவத்திடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. இந்தியா இஸ்ரேல் நட்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.