நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக தொடர்பாக குற்றச்சாட்டுக்கு ஆளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்க மக்களவை நெறிமுறைக்குழு பரிந்துரை செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி என்பவரிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மக்களவை நெறிமுறைக்குழு சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து அவர் கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில், பாதியிலேயே வெளியேறினர்.
இந்நிலையில் மக்களவை நெறிமுறைக்குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. . அப்போது மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்க நாடாளுமன்றத்திற்கு அக்குழு பரிந்துரை செய்யலாம் என கூறப்படுகிறது.
மேலும் மக்களவை நெறிமுறைக்குழுவின் தலைவரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிஎஸ்பி எம்பி தனிஷ் அலி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.