உலகக்கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து வெற்றி !
Mar 15, 2026, 09:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து வெற்றி !

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. இதில் டாஸ் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் களமிறங்கினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 17 பந்துகளில் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மாலன் 10 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 74 பந்துகளில் 87 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் மொத்தமாக 6 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் என 84 பந்துகளில் 108 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கிறிஸ் வோக்ஸ் அரைசதம் விளாசினார். 5 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 45 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக பாஸ் டி லீடே 3 விக்கெட்களும், லோகன் வான் பீக் 2 விக்கெட்களும், ஆர்யன் தத் 2 விக்கெட்களும், பால் வான் மீகெரென் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் வெஸ்லி பாரேசி மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் களமிறங்கினர்.

இதில் 5 வது ஓவரில் மேக்ஸ் ஓ’டவுட் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்த களமிறங்கிய கொலின் அக்கர்மேன் டக் வுக்கு ஆனார்.

இவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த வெஸ்லி பாரேசி 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவரைத் தொடந்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் ஸ்காட் எட்வர்ட் சற்று சிறப்பாக விளையாடி வந்தனர்.

இதில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 33 ரன்களில் ஆட்டமிழக்க ஸ்காட் எட்வர்ட் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தேஜா நிடமானுரு சற்று சிறப்பாக விளையாடி 2 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்களை அடித்து மொத்தமாக 34 பந்துகளில் 41 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் நெதர்லாந்து அணி 38 வது ஓவரில் அனைத்து விக்கெட்டும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக மொயின் அலி மற்றும் அடில் ரஷித் தலா 3 விக்கெட்களை வீழ்த்த்தினர்.

டேவிட் வில்லி 2 விக்கெட்டும் கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 108 ரன்களை அடித்து பென் ஸ்டோக்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags: ICC World Cupengland vs netherlands
ShareTweetSendShare
Previous Post

சைனிக் பள்ளியில் சேர அருமையான வாய்ப்பு!

Next Post

என்ஐஏ அதிகாரிகள் சோதனை! 44 பேர் கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies