ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீபாவளி தர்பார்!
Jul 25, 2025, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீபாவளி தர்பார்!

Web Desk by Web Desk
Nov 10, 2023, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீபாவளி தர்பார் பற்றிய சுவையான தகவல்களை இங்கு அனுபவிப்போம்.

மதுரையை மூவேந்தர்கள், விஜயநகர பேரரசர்கள், நாயக்கர்கள், முகமதியர்கள், பிரிட்டிஷ் அரசு, ஜனநாயக அரசு என எவர் ஆண்டாலும், என்றைக்குமே நிரந்தர இராஜா இராணியாக சுவாமி அம்பாள் ஆட்சி செலுத்துகின்றனர்.

ஆட்சி செலுத்துதல் என்றால் ஏதோ பெயருக்கு என்று இல்லாமல், நம்மோடு வாழ்ந்து நம்மை ஆளும் ஒரு இராஜாவைப்போலவே சோமசுந்தரப்பெருமானும் அங்கயற்கண்ணி அம்மையும் விளங்குவது சிறப்பு மதுரை திருக்கோவிலில் அன்றாடம் நடைபெறும் தினப்படி செயல்பாடுகளைக் கண்டாலே இது நமக்கு எளிதில் புலப்படும்.

சுவாமி அம்பாளின் அன்றாடம் நடத்தப்படும் வழிபாடு வரிசையில் முக்கியமான இடம் பெறுவது இந்த தீபாவளி தர்பார். வருடம் முழுவதும் தனக்கு சேவை செய்பவர்களையும், தமது ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டவர்களையும், தமது பிரதிநிதியாக இருந்து தமது பொறுப்புகளை முறையே நடத்துபவர்களையும் வரவழைத்து பண்டிகை திருநாளை முன்னிட்டு கௌரவிப்பதே இந்த தர்பார் காட்சி ஆகும்.

சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் நூறுகால் மண்டபத்தின் நடுநாயகமாக, உயரிய மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கம்பீரமாக வீற்றிருக்க, மேற்கூறிய ஒவ்வொருவரையும் மெய்கீர்த்தியுடன் பராக் கூவி அழைத்து, அவர்கள் வந்து வணங்கிய பின், தக்க சன்மானம் செய்து கௌரவிப்பதே தர்பார் காட்சி ஆகும்.

சித்தி விநாயகர் கோவில், கூடல் குமரர் கோவிலில் இருந்து ஆரம்பித்து ஆவணி மூலத்திருநாள் உலவாக்கோட்டை செய்து தருவோர் வரை நம் கோவிலோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தரும் இதில் அடக்கம். இதில் சுவையான செய்தி என்னவெனில், முன்னமே கூறியதுபோல் ஒவ்வொருத்தருக்கும் மெய்க்கீர்த்தி உண்டு.

எடுத்துக்காட்டாக “பொன் எழுத்தாணி விழுப்பாதராயர்” என்ற அடைமொழி நம் திருக்கோவில் கணக்கருக்கு வழங்கப்படுகிறது. ‘விழுப்பாதராயர்’ என்பவர்களைப் பற்றிக் குறிப்பிடும் அபிதான சிந்தாமணி என்னும் நூல், “ஆவணித் திருவிழாவிற் சுந்தரபாண்டியரின் பட்டாபிஷேக தினமாகிய ஏழாம் ஆம் திருநாளில், அவரிடமிருந்து பொன்னெழுத்தாணியைப் பெற்று, நாடோறும் கணக்கு வாசிக்கும் உரிமையுடையவர்கள்” என்று குறிப்பிடுகிறது. “பாண்டி பதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர்” என்று இவர் அழைக்கப்படுகிறார்.

அதாவது பாண்டி நாட்டு 14 தலங்களுக்கும் இவரே தலைமை கணக்கர் ஆவார். அதனைப்போலவே நம் திருக்கோவில் ஸ்தாநீக பட்டர்களுக்கு “அனந்த குல சதாசிவ பட்டர், மாளவ குல சக்கரவர்த்தி குலசேகர பட்டர்” போன்ற காரணத்தோடு கூடிய மெய்கீர்த்திகள் தர்பார் பயன்பாட்டில் உண்டு.

இம்மரியாதைகள் பட்டர்களோடு மட்டும் இல்லாமல், கோவில் மகாஜனம், ஒவ்வொரு திருவிளையாடலோடும் தொடர்புடைய வணிகர், உழவர் என் பல்லவேறு வகுப்பைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் என மொத்தம் 86 பேர் சுவாமி அம்பாள் முன் வந்து வணங்குவர். இன்றைய தினம் 36ஆக இது சுருங்கி உள்ளது. நினைத்துப்பாருங்கள், சர்வலோகேஸ்வரனாக எழுந்தருளி இருக்கும் சுவாமி அம்பாள் முன் தன் அடைமொழி பராக்கோடு கூவி அழைக்கப்படவும், அவர்களின் மரியாதையை பெறவும் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் உற்சவர் சன்னதியில் நடக்கும் இந்த தர்பார் கடந்த ஆண்டு மஹோன்னதர்களின் பெரு முயற்சியால், பற்பல ஆண்டுகளுக்கு பிறகு பழையபடி சுவாமி சன்னதி 100 கால் மண்டபத்தில் நடைபெற்றது. தர்பார் முடிந்து சுவாமியும் அம்பாளும் “தீபாவளி புறப்பாடாக” இரண்டாம் பிரகாரம் வலம் வந்து கொடிமரத்தின் முன் தட்டுச்சுத்து தீபாராதனை ஆகி சேர்த்தி சேர்ந்தனர்.

இதனைப்போன்ற தர்பார் திருமலை திருப்பதியில் தீபாவளி ஆஸ்தானம் என்ற பெயரில் இன்றும் சிறப்புற நடைபெறுவது கூடுதல் செய்தி ஆகும்.

Tags: madurai meenakshi templemadurai meenaakshi amman
ShareTweetSendShare
Previous Post

திருத்தணி!

Next Post

அயோத்தி இராமர்கோவில் குடமுழுக்கு விழா அழைப்பிதழ்!

Related News

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

சக்தி திருமகன் படம் – மாறுதோ பாடல் வெளியானது!

நடப்பனஹள்ளி கருப்பசாமி கோயிலில், மிளகாய் யாகமும், பூசாரிக்கு மிளகாய் தூள் கரைசலால் அபிஷேகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies