உலகில் ஒரு சில நாடுகளில் ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை என்று ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது. எந்த நாடுகள் என்று பார்ப்போம்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் செல்வாக்குடன் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், கண்டிப்பாக அங்கு ஒரு இந்தியரையாவது பார்க்க முடியும். ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா வரை எல்லா நாடுகளிலும் இந்திய மக்களைக் காண முடியும். ஆனால், ஒரு இந்தியர் கூட வாழாத நாடுகளும் இருக்கத் தான் செய்கின்றன. அந்த நாடுகளைப் பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதே போல ஒரு இந்தியர் கூட வாழாத சில நாடுகளும் இருக்கின்றன. அதில் ஒன்று தான் வாடிகன் நகரம்.
வாடிகன் நகரம் 0.44 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இங்கு ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு இந்தியர் கூட இங்கு வசிக்கவில்லை. இந்தியாவில் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் உள்ளனர் என்பது வேறு விஷயம்.
இதேபோல், தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பல்கேரியாவில் 2019-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 69 இலட்சத்து 51 ஆயிரத்து 482 பேர் உள்ளனர். இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த நாட்டில் இந்திய தூதரக அதிகாரிகளைத் தவிர, எந்த இந்தியரும் குடியேறவில்லை.
இதேபோல், சான் மரினோவில் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 620 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை.
இதேபோல், ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் எல்லிஸ் தீவுகள் என்று அழைக்கப்படும் துவாலு நாடு அமைந்துள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். ஆனால் ஒரு இந்தியர் கூட இங்கு வசிக்கவில்லை.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இந்தியர்கள் யாரும் வசிக்கவில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றம் மற்றும் பொருளாதார அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியர்கள் யாரும் இங்கு குடியேறவில்லை. பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள், சிறை கைதிகளைத் தவிர, ஒரு இந்தியர் கூட இங்கு வசிக்கவில்லை.