பெரியார் திமுகவையும் காங்கிரஸையும் பற்றி சொன்ன கருத்துக்களை அக்கட்சியின் அலுவலகங்கள் முன்பு வைக்க தயாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
என் மண் என் மக்கள் யாத்திரை 103 தொகுதிகளை கடந்துள்ளது. யாத்திரை நிறைவு நாளில் பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்புள்ளது. பெரிய அனுபவம், பெரிய எழுச்சி, சாதாரண மக்கள் அனைத்து இடங்களிலும் பங்கேற்று ஆதரவு அளித்து வருகின்றனர்.
இன்னும் 131 தொகுதிகள் உள்ளன, ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பின்னர் நாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும்.
பெரியாரை பாஜக அவமதிக்கவில்லை, ஈ.வெ.ரா சிலையை பொது இடத்தில் வைத்து போற்றி கொள்ளட்டும். கோயில் முன் வைக்க கூடாது. பொது இடத்தில் ஈ.வெ.ரா கருத்துக்கள் இருக்கலாம். கோயில் முன் ஈ.வெ.ரா சிலை இருக்க கூடாது. பெரியார் சிலைகள் அகற்றப்பட்டு, எங்கு வைக்கப்பட வேண்டுமோ அங்கு வைக்கப்பட்டு உரிய மரியாதை செய்யப்படும்.
ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள ஈ.வெ.ரா. சிலையை வேறு இடத்தில் வைப்பதே பாஜ.,வின் தேர்தல் வாக்குறுதி. ஈ.வெ.ரா., திமுகவையும், காங்கிரசையும் பற்றி கூறிய கருத்துக்களை அந்த கட்சி அலுவலகங்கள் முன் வைக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
வேங்கை வயல் விவகாரத்தில் 300 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் அடிமட்டத்திலிருந்து ஊழல் தலை விரித்துஆடுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் அநீதி எல்லா மாவட்டத்திலும் காணப்படுகிறது.
தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. இந்து அறநிலைத்துறை இருக்கக் கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. அறநிலையத்துறையை எதிர்ப்பதற்கான காரணம் என்னிடம் உள்ளது. அதை பாஜக செயல்படுத்தும். ரூ.5,344 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.
எத்தனை சொத்துக்கள் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவோடு கட்டாயமாக மீட்க வேண்டும் என்ற நிலை உருவாகி வந்த போது தான் மீட்டுள்ளார்கள். இந்து அறநிலையத்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது.
7லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் கடன், வாங்கிய கடனை எப்படி கட்டுவது குறித்த அறிக்கையை திமுக வெளியிடவில்லை. இந்த ஆண்டு தமிழக அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் கண்டிப்பாக கடன் வாங்கும்.
பஞ்சாப் மாநிலத்திற்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் என்ன பிரச்சனை வந்ததோ! அதே பிரச்சனை தமிழகத்திற்கு திமுக ஆட்சியில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரும்.
கடன் அதிகமாக இருக்கும் போது மீண்டும் கடன் வாங்கினால் அதிக வட்டி கொடுத்து கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். இது குறித்து யாருமே பேசுவதில்லை. கடன் மூலம் தமிழகத்தில் இன்னும் இரண்டு வருடங்களில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகும்.
ஏனென்றால் தமிழக அரசிடம் இது தொடர்பாக எந்த ஒரு திட்டமும் இல்லை, டாஸ்மார்க் கடைகளில் 42 ஆயிரம் கோடி இந்த ஆண்டு வருமானம், அடுத்த ஆண்டு 52 ஆயிரம் கோடியாக மாற்றுவது குறித்து தமிழக அரசு சிந்திக்கிறது ஆனால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக அரசு உள்ளது.
அமல் பிரசாத் ரெடி போல் பாஜக நிர்வாகிகள் நிறைய பேர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பாஜகவின் மீது 409 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இதில் 80 சதவீத வழக்குகளை திமுக ஐடி விங் நிர்வாகிகள் போட்டது.
கைது செய்த பாஜக நிர்வாகியை எப்படி எல்லாம் துன்பப்படுத்தலாம் என்று திமுக சிந்திக்கிறது. திராவிடம் மாடல் ஆட்சி சமூக நீதி இல்லை எனத் தெரிவித்தார்.