பஞ்சாப் மாநிலத்தில் ஒரே நாளில் சுமார் 2000 விவசாய கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வரும் 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாய கழிவு பயிர்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அடுத்த நாளே பஞ்சாப் மாநிலத்தில் சுமரர் 2000 விவசாய கழிவு எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பயிர்களை எரிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாய கழிவுகளை எரிப்பதைத் தடுக்க சிவில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி, விவசாய கழிவி எரிப்பு தொடர்பான தரவுகள நாள்தோறும் பெற்று மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை உயரதிகாரிகள் கூட்டாக ஆய்வுக் கூட்டத்தை நடத்துமாறு தலைமைச் செயலாளர் அனுராக் வர்மா உத்தரவிட்டுள்ளார்.