உடல்நலக்குறைவு காரணமாக ஆப்பிள் நிறுவன இணை இயக்குநர் ஸ்டீவ் வோஸ்னியாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்பிள் நிறுவன இணை இயக்குநராக பொறுப்பு வகிப்பவர் ஸ்டீவ் வோஸ்னியாக். 73 வயதான இவர் , மெக்சிகோ தலைநகர் சாண்டா ஃபே உலக வணிக மன்ற கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.
திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு (தலைசுற்றல்) ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மெக்சிகோ நகரில் உள்ள வோஸ்னியாக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பக்கவாதம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1976 ஆம் ஆண்டில், வோஸ்னியாக் தனது மிகவும் பிரபலமான வணிக கூட்டாளியான ஸ்டீவ் ஜாப்ஸுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நிறுவினார்,
மடிக்கணினி மற்றும் டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் ஐபோன் மொபைல் போன் உட்பட நுகர்வோர் மின்னணுவியல் வரம்பின் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கு ஆப்பிள் நிறுவனம் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.