தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையின் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம்) 4-ம் கட்ட யாத்திரையின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஊழலற்ற ஒரு உன்னதமான ஆட்சியை கடந்த 9 ஆண்டுகளாக வழங்கி வருகிறது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. விவசாய பெருங்குடி மக்கள், மீனவ சமுதாய மக்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரின் பொருளாதார வளர்ச்சி கடந்த 9 ஆண்டுகளில் பன்மடங்காக உயர்ந்துள்ளது.
அறிவியல் துறையில் இன்று இந்தியா பல சாதனைகளை செய்து வருகிறது.
இதனால், வேண்டும் பிரதமர் மோடி 2024 என்ற தாரக மந்திரத்தோடு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி ராமநாதபுரத்தில், முதல்கட்ட யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இதுவரை இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட யாத்திரை வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது.
இந்த நிலையில், டிசம்பர் மாத யாத்திரை குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, என் மண், என் மக்கள் யாத்திரையின் பொறுப்பாளர் கே.எஸ். நரேந்திரன், இணை பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
அதில், நவம்பர் 15-ம் தேதி ஜெயங்கொண்டம், அரியலூர், 16-ம் தேதி, குன்னம், பெரம்பலூர், 17 -ம் தேதி லால்குடி, மணச்சநல்லூர், 24-ம் தேதி துறையூர், முசிறி, 25-ம் தேதி திருவையாறு, தஞ்சாவூர், 26-ம் தேதி ஒரத்தநாடு, மன்னார்குடி, 27-ம் தேதி பேராவூரணி, பட்டுக்கோட்டை, 28-ம் தேதி திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், 29-ம் தேதி கீழ்வேளூர், நாகப்பட்டினம், 30-ம் தேதி பூம்புகார், மயிலாடுதுறையில் நடைபெறுகிறது.
இதனைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் 1-ம் தேதி அன்று நன்னிலம், திருவாரூர், 2-ம் தேதி பாபநாசம், கும்பகோணம், 3-ம் தேதி திருவிடைமருதூர், சீர்காழியில் நிறைவு பெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.