இந்த ஆண்டின் கருப்பொருள் ” உங்கள் போட்டியாளரின் தரத்தையும் திறனையும் புரிந்துகொள்வதாகும் “
உலகத் தரத்திற்கான தினமானது பொதுவாக நவம்பர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
எங்கும் எதிலும் தரம் இருக்க வேண்டும் என்பதும், தர நிர்வாகம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்தினத்தில் முக்கியத்துவமாக உள்ளது.
மேலும் இது பட்டயத் தரங்கள் நிறுவனத்தின் (CQI- Chartered Quality Institute) நூற்றாண்டு நிறைவு தினத்தையும் குறிக்கின்றது.
பெரும்பாலான மக்கள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுடன் தரத்தை தொடர்புபடுத்தும் அதே வேளையில், தகவல் யுகம் தரத்திற்கான ஒரு புதிய எல்லைக்கு வழிவகுத்துள்ளது.
இந்த நாளில், ஒரு வணிகத்தில் உள்ள ஒவ்வொரு பணியாளரும் நிர்வாகமும் தங்கள் பணியிடத்தில் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் உலக தர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டு ஒரு கருப்பொருள் அறிவிக்கப்படும். அவ்வாறு இந்த ஆண்டின் கருப்பொருள் “உங்கள் போட்டியாளரின் தரத்தையும் திறனையும் புரிந்துகொள்வதாகும்”.