உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று அயோத்தியில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது ராமர் கோவில் கட்டுமான பணி மற்றும் கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் சுமார் 4 மணி நேரம் செலவழித்து, அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு தீபாவளி பண்டிகைக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடுகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று காலை ராமகா பூங்காவிற்கு வருதை தந்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது அமைச்சரவை சகாக்களுடன் ஹனுமன்கர்ஹியில் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தார். அதைத் தொடர்ந்து, அவர்கள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி வளாகம் மற்றும் ஸ்ரீ ராம் லாலா விராஜ்மானை வழிபாடு செய்தனர்.
உத்தரபிரதேச வரலாற்றில் மாநில தலைநகருக்கு வெளியே அமைச்சரவை கூட்டங்களை நடத்திய முதல் முதல்வர் யோகி ஆதித்யநாத்.” இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவின் போது இதேபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து, யோகி அமைச்சரவை, பகவான் ஸ்ரீ ராம் லல்லாவின் வணக்கத்திற்குரிய பிறந்த இடமான அயோத்தியில் தற்போது கூடுவதாக முதலமைச்சர் அலுவலகம் கூறியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் 24 அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.