வரும் டிசம்பர் 4-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மத்திய நாடாளுமன்றத்திற்கான விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், வரும் டிசம்பர் 4-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெறும். குளிர்கால கூட்டத் தொடரான இந்த கூட்டத் தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன என தெரிவித்தார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக ஆட்சியில் பொது மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதனால், கோடிக்கணக்கானோர் பயன் பெற்றுள்ளனர். இதனால், தேசப்பற்றாளர்களும், பொது மக்களும் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொது மக்கள் நலன் கருதி, இந்த கூட்டத் தொடரில் மேலும், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.