திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கில், விசாரணையை வரும் 28-ம் தேதி வாதங்களை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011 -ம் ஆண்டு வரை திமுக ஆட்சி பொறுப்பில் இருந்த அமைச்சர்கள் சிலர் வருமானவத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012-ம் ஆண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்று, அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு பட்டியல் இடப்படாத நிலையில், எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்பிக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வது இந்த வழக்கை எடுத்தார். இதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்பிக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கில், விசாரணையை வரும் 28-ம் தேதி வாதங்களை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.