சிவகங்கை மாவட்டம் மடப்புறம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை என்னும் போது, சுவாமிக்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட கொலுசை, கோவில் அதிகாரி ஒருவர் திருடிவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புறம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.
அப்போது, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இரண்டு தங்கக் கொலுசு உண்டியலில் செலுத்திருந்தார். அந்த கொலுசு கணக்கில் வரவில்லை. இதனால், கோவிலில் உள்ள கண்காணிப்பு படக்கருவியைப் போட்டு ஆய்வு செய்தபோது அந்த நகையைத் திருடியது, கோவில் இணை ஆணையர் வில்வ மூர்த்தி என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், இணை ஆணையர் வில்வ மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்காமல் நகையை மட்டும் பெற்றுக்கொண்டு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளாக புகார் எழுந்ததுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இணை ஆணையர்கள் சிலர் இது போன்று பல திருட்டு சம்பவங்களில் பல கோடி சொத்துக்கள் சேர்த்து உள்ளதாகவும்,
எனவே, இதுபோன்ற அதிகாரிகளை காவல்துறை கண்டறிந்து அவரது சொத்தை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆன்மீக அன்பர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துத்தியுள்ளனர்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தச் சிவகங்கை மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனர்.