திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரியில் அமைந்துள்ளது அருள்மிகு பலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
இங்கு அமர்ந்துள்ள முருகப் பெருமான் பல சக்திகளைக் கொண்டவர் எனப் போற்றப்படுகிறார். காரணம், லவ -குசா இருவரும் சிவபெருமானையும், முருகனையும் இங்கு வழிபாடு நடத்தியுள்ளனர்.
வள்ளியுடன் திருமணக் கோலத்தில் இங்கு வந்து முருகன் தங்கியதால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமணம் உடனே நடைபெறும் என்பது ஐதீகம்.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில், கந்த சஷ்டி விழா 13 -ம் தேதி சிறப்புப் பூஜையுடன் தொடங்குகிறது.
கந்த சஷ்டி விழாவையொட்டி, தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி, கொடிக் கம்பம் அருகே வீற்றிருக்க, கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.
கந்த சஷ்டி விழாவையொட்டி, இரவில் சுவாமி புறப்பாடும், இதனைத் தொடர்ந்து, பகலில் சண்முகருக்கு அபிஷேகமும், சண்முகர் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
பின்னர் மூலவருக்குச் சிறப்பு அபிஷேகமும், மாலை திருக்கல்யாண உற்சவமும் நிகழ உள்ளது.
18 -ம் தேதி மாலை சன்னதி வீதியில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.