மும்பை அருகே சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு கார் ஒன்று வொர்லியிலிருந்து பாந்த்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதிதியல் உள்ள சுங்கச்சாவடியில் நின்ற வாகனங்கள் மீது மோதியது. இதில் 6 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதின. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 9 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலியானோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.