டெல்லியில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை லேசான மழை பெய்ததால் காற்று மாசுபாடு காரணமாக கடும் இன்னல்களை எதிர்கொண்டு பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வந்தது. நகரின் 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI), 8ஆம் தேதி 4267 ஆக இருந்த நிலையில் வியாழன் அன்று 437 ஆக உயர்ந்தது.
அதேபோல் டெல்லி அருகே உள்ள காசியாபாத் (391), குருகிராம் (404), நொய்டா (394), கிரேட்டர் நொய்டா (439) மற்றும் ஃபரிதாபாத் (410) ஆகியவையும் மிகவும் மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்தது.
இந்நிலையில், நேற்று இரவு (நவ.,09) மற்றும் இன்று அதிகாலையில் மிதமான மழை பெய்தது. இதன் மூலம் காற்றில் மாசுத்தன்மை குறைந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் சில முக்கிய பகுதிகள் இன்னும் மாசு அபாய கட்டத்திலேயே உள்ளது.