ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 ஆம் தேதி அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ‘ உலக அறிவியல் தினம் ‘ கொண்டாடப்படுகிறது.
2001 ஆம் ஆண்டு ஐ.நா.வின் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பினால் இந்த தினம் கொண்டுவரப்பட்டது.
உலகம் முழுவதும் அறிவியலின் பயன்கள், முக்கியத்துவங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நமது சமூகத்தில் அறிவியலின் முக்கிய பங்கை இத்தினம் சுட்டிக்காட்டுகிறது. மேலும் சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி இத்தினத்தில் கௌரவிக்கிறது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் உலக அறிவியல் தினத்திற்கான ஒரு கருப்பொருள் அமைக்கப்படும் அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ” அறிவியலில் நம்பிக்கையை வளர்ப்பது ” என்பதாகும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் பெயரில் அவநம்பிக்கை அதிகரித்து வருவதன் மத்தியில், ’அறிவியலில் நம்பிக்கை உருவாக்குதல்’ மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.