கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள் குறித்து
சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள், 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் கடந்த 6 -ம் தேதி சிங்கப்பூரிலிருந்து விமானம் ஒன்று கோவை வந்தது. அப்போது பயணிகளின் உடைமைகளை வழக்கம் போல் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகள் பெட்டியை அப்படியே வைத்து விட்டுச் சென்றறு தெரிய வந்தது.
ஒருநாள் முழுவதும் 3 பெட்டிகளை அங்கேயே இருந்ததால் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகமடைந்தனனர்.
அந்த பெட்டிகளைக் கொண்டு வந்தது யார் என சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அப்போது 3 நபர்கள் பெட்டி எடுத்து வந்து வைத்து விட்டுச் சென்றது தெரிய வந்தது.
பெட்டியை எடுத்து வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் 3 பேரும் சிங்கப்பூரிலிருந்து வந்தவர்கள் எனத் தெரிய வந்தது.
அவர்களின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, டொமினிக், ராமசாமி என்ற இருவர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகினர். ஒருவர் எஸ்கேப்பாகிவிட்டார்.
விசாரணையில், சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு உயிரினங்களான ஆமை குஞ்சுகள், சிலந்தி வகைகள், அரியவகை பாம்புகள் இருப்பது தெரிய வந்தது.
கைப்பற்றப்பட்ட அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் என்பதால் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபிடிட்ட இருவரும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.