தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்த உலகக்கோப்பையின் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் இன்று விளையாடவுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று இன்றையப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானதில் நடைபெறவுள்ளது.
இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.
இந்நிலையில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அதிக ரன் ரேட்டில் அபார வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
தென்னாப்ரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அந்த அணியின் முக்கிய பலமாக இருக்க, பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு கடும் நெருக்கடி தந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்துவீச்சை கொண்டு ஜாலம் நிகழ்த்தி வருகிறது. பேட்டிங்கிலும் முன்கள வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு அணியாக சேர்ந்து முயற்சித்து வெற்றியை வசப்படுத்துவது ஆப்கானிஸ்தானின் கூடுதல் பலமாக உள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 1 முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
நரேந்திர மோடி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமைகிறது. அதேநேரம் போட்டியின் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் சற்று நிலைத்து நின்று ஆட வேண்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்புக் கணக்கெடுப்பில் தென் ஆப்பிரிக்கா அணி 74% வெற்றி பெரும் என்றும் ஆப்கானிஸ்தான் அணி 26% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.