ஸ்டாலின் தலைமையில்தான் ஊழல் அனைத்தும் நடக்கிறது எனப் பாஜக மாநிலப் பிரச்சார பிரிவு தலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு,
திமுகவின் மந்திரிகள் எம்.பிக்கள் என 12 ஊழல் பெருச்சாளிகளின் பட்டியலை மக்கள் தலைவர் அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியலை டி.எம்.கே பைல் 1 என வெளியிட்டார்!
டி.எம்.கே பைல் 2 என 300 க்கும் அதிகமான பினாமிகளின் பட்டியல் ஆளுநரிடம் ஒப்படைத்தார் மக்கள் தலைவர்!
முதல் பட்டியலில், 1,34,317 கோடி ரூபாயும், இரண்டாம் பட்டியலில் 5000 கோடி ரூபாயும் திமுகவின் ஊழல் தொகையாக மக்கள் தலைவர் அறிவித்தார்! 300 பினாமிகளின் சொத்துக்கள் கணக்கிடப்படவில்லை!
நீச்சல் குளத்தின் அடியில் பணம், பயன்படுத்தப்படாத கட்டிடங்களில் பணக்குவியல், நகைக்குவியல், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் பிணவறைகளில் ரேக் ரேக்காக பிணத்திற்குப் பதிலாக பணம்!
மூட்டை மூட்டையாக ஆந்திராவுக்கு கடத்தப்படுகிறது பணம் என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது! இப்போது நடப்பது அதிமுக ஆட்சியாக இருந்து மந்திரிகளின் நிருவனங்களில் சோதனை நடத்தப்பட்டிருந்தால், கண்டெய்னர்களில் அதிமுக பணம் ஆந்திராவுக்கு கடத்தப்படுகிறதை பாருங்கள் என்று, ஒரு கண்டெய்னர் லாரியின் படத்தை சன் டிவியில் வெளியிட்டு, தலைப்பு செய்தியில் ஆயிரம் முறை காட்டியிருப்பார்கள்!
நூற்றுக்கணக்கான அதிகாரிகள் வாரக்கணக்கில் சோதனை!
பணம் எண்ணும் எந்திரம் இல்லாத மந்திரிகளின் வரவேற்பறையே இல்லையாம்!
வெளிநாடுகளில் இந்திய அரசுக்கு போட்டிப்போடும் அளவுக்கு திமுகவின் முதலீடுகள் குவிகிறதாம்!
எல்லா மொழிகளிலும் தொலைக்காட்சி தொழில்களை திமுக செய்கிறது!
ஏரோபிளேன் நிறுவனங்கள்!, கப்பல் நிறுவனங்கள்!
இவ்வலவு பணத்தை எப்படி திமுகவால் சம்பாதிக்க முடிகிறது?
இது ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய கேள்வி!
சாராய ஆலையிலிருந்து தினமும் தலைமை குடும்பத்திற்கு மட்டும் 100 கோடி அளவுக்கு வருவதாக சொல்லப்படுகிறது!
பஞ்சாயத்து அலுவலகம் முதல் தலைமைச்செயலகம் வரை அனைத்து அலுவலகங்களிலும் வசூலிக்கப்படும் கமிஷன் தொகையின் பங்கு தினமும் 100 கோடி அளவுக்கு அதே தலைமை குடும்பத்திற்கு செல்கிறதாம்!
மணல் கடத்தல் மூலமாக, மலைகள் தகர்ப்பு மூலமாக, மருத்துவ கல்லூரிகள் மூலமாக …. அளவற்ற பணம் தலைமைக் குடும்பத்தை நோக்கி நகருகிறதாம்!
தலைமைக் குடும்பம் இதற்கான பதுங்கு குழிகளை தங்களின் வீடுகளில் மட்டும் வைத்திருக்கவில்லையாம்!
திமுக பைல் எண் ஒன்றில் குறிப்பிடப்பட்ட அந்த 12 நபர்களின் ஆயிரக்கணக்கான ரகசிய இடங்களும்தான் தலைமை குடும்பத்தின் பதுக்கும் குழியாக செயல்படுகிறதாம்!
இது மட்டுமின்றி எம்.எல்.ஏ க்களும் எம்.பி க்களும் கூட திமுகவின் அனைவருமே தலைமை குடும்பத்தின் பினாமியாகத்தான் செயல்படுகிறார்களாம்!
மாவட்ட செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், கிளை செயலாளர்கள், இப்படியாக திமுகவின் லாக்கர்களின் எண்ணிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லையாம்!
இது 55 ஆண்டுகளாக வளர்ந்துவிட்ட ஊழல் என்னும் புற்றுநோய்!
முழுமையாக அறுவை சிகிழ்சை செய்யும்போது ஊழலில் மீதம் இருக்காது! அதேவேளையில் திமுகவும் இல்லாமல் போய்விடும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்!
இப்போது செந்தில்பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன், ஏ.வ.வேலு என ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் ஒரு மூலையில்தான் சிறிதாக துவங்கியிருக்கிறதாம்!
இந்த நடவடிக்கைகள் முழுமையடையும்போது பாருங்கள்! திமுக மட்டுமல்ல தி.கவும் இருக்காது என்கிறார்கள்!
இந்த ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான திமுக ஊழல்வாதிகள் அனைவருமே தலைமைக் குடும்பமான கருணாநிதி குடும்பத்தின் பினாமிகளே என சொல்லப்படுகிறது!
அந்த குடும்பத்தின் சார்பில் இவர்கள் செயல்படுகிறார்கள் அவ்வளவுதான்!
சில ஊடகவியலார் இதுவெல்லாம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? என கேள்வியை எழுப்பும் வகையில் பொய்யான வருணனையை சொல்லி வருகிறார்கள்!
ஸ்டாலின் உத்தரவின் பெயரில்தான் திமுகவில் அனைத்துக் நடக்கிறது என்கிறார்கள்! எ.வ.வேலு வீட்டில் 28 கோடி பணம் கிடைத்தது, 500 கோடிக்கான முதலீடு பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன என்றெல்லாம் செய்தி வருகிறதென்றால், அது எ.வ.வேலு சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, அது மு.க.ஸ்டாலின் பணம்தான் என சொல்லப்படுகிறது!
அதிமுகவில் கைதேர்ந்த சம்பாத்தியக்காரர்கள் என்னும் அடிப்படையில்தான் எ.வ.வேலுவையும் ஜெகத்ரட்சகனையும் கருணாநிதி தனக்கு பினாமியாக வைத்துக்கொண்டார்!
அதே அடிப்படையில்தான் ஸ்டாலின் இன்னும் ஒரு பினாமியாக செந்தில் பாலாஜியை சேர்த்துக்கொண்டார்! மொத்தத்தில் பல லட்சம் கோடிகள் ஸ்டாலின் பொறுப்பில் இப்போது உள்ளது என சொல்லப்படுகிறது!
இதில் ஒரு சிறி பகுதியாக ஒரு 10,000 கோடியையோ 20, 30 ஆயிரம் கோடிகளையோ வாக்காளர்களுக்கு 20,000, 30,000 என கொடுத்திட தயாராக வைத்திருக்கிறார் ஸ்டாலின் என சொல்லப்படுகிறது!
அந்த பணம் எங்கே இருக்கிறது? அது ஸ்டாலின் விட்டில் அல்ல!
அவரது பினாமிகளின் நிறுவனங்களில்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது!
அதிமுகவிலிருந்து வந்தவர்களையே முக்கியமான பினாமியாக ஸ்டாலின் வைத்திருப்பதால், சினம் கொண்ட பழைய திமுகவினர்தான், வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்து வரச்சொன்னதாக தகவல்கள் உலா வருகின்றன!
திமுகவின் அழிவுக்கு திமுகவே காரணமாக அமைந்துவிட்டதாக பலரும் பேசிக்கொள்கிறார்கள்!
இங்கு தமிழகத்தில் திமுகவில் மட்டுமல்ல, நாடு முழுமையுமே இத்தகைய வருமானவரித்துறை சோதனைகள் நடக்கிறது!
ஊழல்வாதிகளை விடமாட்டேன் அவர்களை தண்டித்து சிறைக்கு அனுப்புவேன் என பிரதமர் நரேந்திர மோடியும் சபதம் மேற்கொண்டுள்ளதால், இது திமுகவுக்கு ராகு காலம் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்! எனத் தெரிவித்துள்ளார்.