ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று இன்றையப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானதில் நடைபெறுகிறது.
இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.
இந்நிலையில் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அதிக ரன் ரேட்டில் அபார வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்நிலையில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் :
ஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ராம் அலிகில், ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக் மற்றும் நூர் அகமது
தென் ஆப்பிரிக்கா அண்ணியின் வீரர்கள் :
குயின்டன் டி காக் , டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ஆண்டிலே பெஹுலுக்வாயோ, ககிசோ ரபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சி.