பெங்களூருவில் தன் பேரனுக்கு திருஷ்டி சுற்றிப் போட்ட நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவின் பாட்டி.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் இந்திய வம்சாவளியை சார்ந்த நியூசிலாந்து அணியின் வீரர் ரச்சின் ரவீந்திரா பெங்களூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணியின் கடைசி லீக் போட்டியில் விளையாடினார்.
அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றது, அதுமட்டுமில்லாமல் இந்த உலகக்கோப்பைத் தொடரில் ரச்சின் ரவீந்திர சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். ஆகையால் அனைவரும் ரச்சின் ரவீந்திராவை கண்டு வியப்பில் உள்ளனர்.
இந்நிலையில் ரச்சின் ரவீந்திர பெங்களுருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கே அவரது பாட்டி அவர்கள் பாரம்பரிய முறைப்படி அவருக்கு திருஷ்டி சுற்றிப் போட்டார். அதைப் ரச்சின் சற்று வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.
சமீபத்தில் அவர் ஒரே உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் சச்சினின் நீண்ட கால சாதனையை முறியடித்து இருக்கிறார். இதனால் ஊரே தன் பேரனை பாராட்டி வரும் நிலையில், அவரது பாட்டி அவருக்கு திருஷ்டி சுற்றி இருக்கிறார்.
மேலும் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் பெயரை இணைத்தே அவருக்கு ரச்சின் என அவர் தந்தை பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.